Blogger இயக்குவது.

சனி, 27 ஜூலை, 2013

காதல் தீ


♥தீண்டாதே♥ ::::
கேலிச்  சித்திரம் வரைவதற்கு
இது போலிச் சுவர்♥ இல்லை,
போலியாய் தீண்டாதே.....
உன்னை திண்ணும் புழுக்களுக்கு
புழுவாய் நெளிந்துவிடு.....
புழுவாய் புரளும் பாவனை இல்லை....
இனியும் தீண்டாதே♥!!!!!!
அணைப்பதற்கு ♥இல்லை .!!!
                .......♥S BALAJI♥-----

வெள்ளி, 5 ஜூலை, 2013

----முதிர்கன்னி.....

பேய் (கனவல்ல, நிஜம்!!):
கனவில்.......
புதுப் பட்டுடுத்தி
பொன்னகை போட்டு எனை
மணமேடை ஏற்ற வந்தாள் "தாயவள்"!!

புன்னகை அடகு வைத்து
பொன்னகை ஈட்டி எனை
மணமாலை காண வந்தான் "தகப்பனவன்"!!

குறுநகை காட்டி
நெற்றிப் பொட்டிட்ட என் முகத்தில்
நேர்ப்போட்டு இட வந்தான் "என்னவன்"!!

கனவு களைந்து,
விளித்து எழுந்தவள்
விழியில்
துளி நீரும் இல்லை!!

ஈர நெஞ்சம் வறண்டு
கானல் நீரான கண்ணீரோடு..
பணப் "பேய்"களுக்கான பொன்னகை தேடலில் ..
"பேய்"ஆகிப்போன..

தன்னை "விதைத்தவனையும்" ,
ஈன்று "வளர்தவளையும்",
"புண்" அழுகை காட்டி
புகைப்படத்தில்

பார்க்கிறாள்..
----முதிர்கன்னி.....

   BY
S BALAJI

அழியாத யுத்தங்கள் ::

அழியாத யுத்தங்கள் ::

மகாபாரதம் மண்ணிற்காக..

ராமாயணம் பெண்ணிற்க்காக...

---இன்றும் ,

என்றும

MIRUGAM

புருவங்கள் மாறிய உருவங்கள் ,

உருவங்கள் மாறிய மிருகங்கள் ,

குணங்கள் மாறாதது ஏனோ ??

---மனிதன் ..

இளம் விதவை இன் இதிகாசம் :


இளம் விதவை இன் இதிகாசம் :

"நான் பூ மனம் வீசிய பூவையாக,

நீ ஆழ் மனம் குளிர அழைத்தாயே

உன் மனமாய் ஒன்றமர்ந்தேன்,

திருமணத்தால்..."

"நீ ஒரு கனம் என் வாழ்ந்து

பல கனம் தந்தாயே

என் மனதில்..."

"நான் நறு மணம் வீசும் பூவாக வாழ

எனக்கு மறு கனம் தாராயோ??

மறு மணத்தால்..."

-------மண் இல்லை பெண் மனமும்.....by S BALAJI

பூஞ்சோலை :

பூஞ்சோலை :
அவள் மடி தவளவில்லை,
அவன் தோள் சாயவில்லை,
அவளு மானாள், அவனு மானான்
உண்டு உறைவிட பள்ளி இன்,
உணவு அளித்த ஆயாவும்,
ஊக்கம் அளித்த அப்பனும்...
---பாலைவனக்கள்ளி.....

பிறழ் உறவாலே...

பிறழ் உறவாலே...

அண்ணம் பிறழும், 

அணு பிறழும், 
அன்பு பிறழும், 
அமைதி பிறழும் ,
அறிவு பிறழும்,
 உடல் பிறழும்,
 வாழ்வு பிறழும்,
 நல் விதி பிறழும், 
இன்பம் பிறழும் 
இறுதியாய் இன்நுயிர் பிறழும்....
பிறழ் உறவாலே...பிறழ் உறவாலே...
பிறழ் உறவாலே...

---நீதி தேவதை....



பணத்தாலே பேசுதடி
என் நாவும் சுழலுதடி,
என் கண்ண கட்டி விட்டு ,
எதச் சொல்ல நானும்...??

அதிக எடை தானே
ஒத்தக்கை போதாதடி,
களவை களவாட
ஒத்த வால் போதாதடி..
எனக்கொரு நீதி சொல்ல
எந்த தேவதை வருவாளோ??
---நீதி தேவதை....
(செ பாலாஜி )

ஆறறிவாரோ ,? ஐந்தறிவாறோ,? யாரறிவாரோ ..???

ஆறறிவாரோ ,? ஐந்தறிவாறோ,? யாரறிவாரோ ..???

Add caption
"பாலூட்டிக்கு
பாலூட்டும்
பாலூட்டிக்கு",
"பாலூட்டி
பாலூட்டிய
பாலூட்டிகள்
பாலூட்டிக்கு
பாலூட்டாதது ஏனோ ??"
----பாலூட்டி( செ பாலாஜி )....

ஆவல் :

ஆவல் :
மீண்டும் பிறக்க வேண்டும்
அணைத்து வாழும் குரங்காய்
காதலால் வாழும் அன்றிலாய்

பகிர்ந்து ஊட்டும் எறும்பாய்
அமைதியாய் வாழும் புறாவாய்
இறந்தால் கூடும் காகமாய்
தன்னினம் காக்கும் ஐந்தறிவாய்
போலியற்று...
பிறக்க வேண்டும் மீண்டும் ..
...ஆவலுடன்...

ரௌத்திரம்!:

ரௌத்திரம்!:
ஆண் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒரு ஆணாக சாகிறான்....
ஆனால் பெண் ---பூப்பு எய்தாதவள்,முதிர்கன்னி, விதவை, வாழ்வு இழந்தவள், கணிகை போன்ற பல பரிமாணங்கள் கடந்து இறப்பை நோக்கி செல்கிறார்...
இது ஆண் சமூகத்திற்கு மட்டும் சப்பை கொட்டு போடும் ஒரு கேடு கெட்ட சமூகமோ!????

(கதறல்) கேளிக்கை ::::::::;

(கதறல்) கேளிக்கை ::::::::;

திரேதா யுகம் --- ராமாயணம்????
துவாபரயுகம் --- மகாபாரதம்????
கலியுகம் --- ராமாயணம் & மகாபாரதம் & ..............?????
கிறிஸ்து ???
நபிகள் ???
ஒட்டுமொத்ததுல கடவுளையே கதறவிட்ட உலகம் ஹீ..ஹீ..ஹீ!! ஹா..ஹா,,,,!!

....கதறியவன்----

பச்சோந்தி..

பச்சோந்திகளால் பச்சோந்தியாய் ...
---பச்சோந்தி..

செவ்வாய், 2 ஜூலை, 2013

தாலாட்டு

ஆரி ராரி ரா ரா ரோ :

''கரும்பு வெட்டி கால் நிறுத்தி
கணுக்கணுவா தேனுருக்கி
கனுவுருக தேனுருக
கண்டார் மனமுருக
எலும்புருக ஈன்றெடுத்த
இளஞ்சியமே யாரடுச்சா??
அடுச்சவர சொல்லி அழு
அத்தை அடுச்சார
அரலிப்பூ செண்டால
மாமன் அடுச்சார
மல்லிகப்பூ செண்டால
யாரடுச்சு நீ அழுக??''
மா...
""யாரும் அடிக்கவில்ல
ஐவிரலால் தீண்டவில்ல
தாயார் மடி தேடி
தன்னால அழுது வந்தேன்""!!!

S BALAJI

திரு.மங்கை :::

திரு.மங்கை :::

விதைத்ததுமே விளையவில்லை,
விளைந்ததுமே விலை(னை )யில்லை ,
விதைத்தவனும் வெட்டிவிட்டான் ,
ஈன்றவளும் இழிந்துவிட்டாள்,
வீட்டிற்கு பாரமென
ரோட்டிற்கு வந்தவரோ ???
இருபாலையும் இழ(கல)ந்துவிட்டு
கலங்கிதான் நிற்பவரோ ????
பசிக்கு இறக்காமல்
இரந்துதான் வாழ்பவரோ ?????
ஆயிரம் இயல் தான் உழைப்பதற்கு
அதில் எந்த இயல் (பால்) தான் கண்டீரோ ??????
விதியிலும் வீதியிலும் வழியில்லாத
அர்த்தங்களை தேடும்
அர்த்தமற்ற நாதிகளாய்........
------அர்த்தநாரிகள்.......

(பார்வையில் இருந்து, S BALAJI

ஒரு தெலுங்கினம் தந்த காவியம்:::

ஒரு தெலுங்கினம் தந்த காவியம்:::

தெளியாத ஓடையில்
தெளிந்த நீராய் தெளியும்
தெளிவில் , இரு  திதயம்
தெரியாமல் தடமாறி ,
இடமாறி..
நிறம் அறியா ..
பணம் அறியா
பிறப்பறியா
""கவி யறிந்து
எழுத்து அறிந்து
உணர்வறிந்து
உளமறிந்து
தெய்வீகமாய்
பாதுகாப்பாய் துடித்தது.!
 இரு(தி)தயத்தில்''
""எட்டும் பதினாறும் (குரவும் ,பலிவிதியும்)
படைத்தவன் வகுத்தானோ ??
இல்லை படைப்புகள்
வகுத்தனவோ ??
எண்ணால் இரு  திதயம்
துடிக்கிறது
தெளியாத நீராய்
தெளிந்த ஓடையில்...""
என்றும்  தோழமை ஆக இருப்போம்  என.......

                    ---S BALAJI..