Blogger இயக்குவது.

சனி, 20 ஏப்ரல், 2013


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥:
""வந்த வழி தெரியாமல்
ஆழமாக சென்றுவிட்டாள்"",
""வந்த வழி கேட்கிறாள்,
  விடை சொல்ல தெரியவில்லை"",
""எந்த வலியும்  வலி இல்லை
இந்த வலி தான் கொடியதோ,
♥♥♥♥விழி நீரின் விலையும்,
மருந்து தான் என்னவோ???♥♥♥
                 ♥♥♥♥♥ S BALAJI♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

கவிஞர் தாமரைக்கு,
கோவன் புத்தூர்(கோவை ) தானே ஈன்றெடுத்த  பெருமையாய்,
வீனையின்  பூவாலே பெயரோடு பிறந்தாயே,
குழந்தை பருவமாக பாட்டெழுதி  வளர்ந்தாயே,
இயந்திரத் துறை தானே பட்டமாய் பெற்றாயே,
இயந்திர  சாலையில் இயந்திரமாய் உழன்றாயே,
கயவனின் கயிறாலே காயங்கள் பெற்றாயே,
பணப் பேய் தானே, அ(ஆட)வன் குணம் அறிந்து தான்,
பொன் மனமும் புண்ணாக, பாலைவன கள்ளியாக
பார் பார்க்க விழித்தாய் நீ !!!
தமிழ் தந்த வீர(தாக)த்தால், பசியோடு பறந்தாயே,
கோடம்பாக்கமும் ஏளனமாய் ஏசியதே,
வற்றிய வயிறோடு வாடாமல் போராடி,
இரும்பான இதயத்தால், இனிதான எழுத்தாலே
"இனியவளே" இல் இசைத்தாய் நீ !!!
உணராத உணர்வாலே, உணர்வான வரியாலே,
மழையாக பொழிந்தாய் நீ!!!
வனமான உன் வாழ்வும் மணம் மாற
மலர்ந்தாய் நீ!!!
என்றும் புயல் மழையாய் நீ உதிர்ந்து,
என்றும் மடியாத மலராக மலர,
உதிர  உறவிலா இந்த இளவலுக்கும் ஆசைதானே !!!
                                          இவன்
                                .....செ பாலாஜி ....

சனி, 6 ஏப்ரல், 2013

தாலாட்டு

ஆரி ராரி ரா ரா ரோ :
வாசலில வன்னி மரம்
வம்சம் ராச குலம்
ராசகுலம்  ஈன்றெடுத்த
ரத்தினமே ....
ரத்தினமே நித்திரை போ ...
சித்தரப்பூ தொட்டியிலே....
                  --- பாமரன் பாலாஜி