கோவன் புத்தூர்(கோவை ) தானே ஈன்றெடுத்த பெருமையாய்,
வீனையின் பூவாலே பெயரோடு பிறந்தாயே,
குழந்தை பருவமாக பாட்டெழுதி வளர்ந்தாயே,
இயந்திரத் துறை தானே பட்டமாய் பெற்றாயே,
இயந்திர சாலையில் இயந்திரமாய் உழன்றாயே,
கயவனின் கயிறாலே காயங்கள் பெற்றாயே,
பணப் பேய் தானே, அ(ஆட)வன் குணம் அறிந்து தான்,
பொன் மனமும் புண்ணாக, பாலைவன கள்ளியாக
பார் பார்க்க விழித்தாய் நீ !!!
தமிழ் தந்த வீர(தாக)த்தால், பசியோடு பறந்தாயே,
கோடம்பாக்கமும் ஏளனமாய் ஏசியதே,
வற்றிய வயிறோடு வாடாமல் போராடி,
இரும்பான இதயத்தால், இனிதான எழுத்தாலே
"இனியவளே" இல் இசைத்தாய் நீ !!!
உணராத உணர்வாலே, உணர்வான வரியாலே,
மழையாக பொழிந்தாய் நீ!!!
வனமான உன் வாழ்வும் மணம் மாற
மலர்ந்தாய் நீ!!!
என்றும் புயல் மழையாய் நீ உதிர்ந்து,
என்றும் மடியாத மலராக மலர,
உதிர உறவிலா இந்த இளவலுக்கும் ஆசைதானே !!!
0 comments:
கருத்துரையிடுக